Wednesday, 19 May 2010

காலங்காத்தால நடை பயிற்சி!

கன்னி முயற்சி! வயசு நாற்பதுக்கு மேல ஆச்சு.. (அதான் சொல்லிட்டேன்ல.. அதுக்கு மேல எத்தன வயசானா என்ன?); இளம் தொப்பை (வயசோ, வசதியோ). அரை ட்ராயரோட பசங்கள வெளயாட கூப்டா, “இல்லப்பா எங்க ஃப்ரெண்ட்ஸோட வெளயாடறோம்”னு ஓஓஓடி போறாங்க. ஆட்டோ ட்ரைவர் கூட “அங்கிள்”னு கூப்டறான்.
ஒரே சோகமாயி, ஒரு வெறியோட ஒரு நாள் காலங்காத்தால நடக்கப் போனேன். அதெல்லாம் ஒரு ஆர்ப்பாட்டமாதான் கெளம்பினேன். (புது டி-ஷர்ட், புது ஷார்ட்ஸ், புது ரன்னிங் ஷூஸ்.. கலக்கறீங்க).

“இது யாற்ற்ற்ற்ற்றா புதுசு!” .. (கைல குச்சி வெச்சிருக்கணுமோ!). கொஞ்சம் நடந்துட்டு ஓடலாமா.. இல்ல திரும்பி போயிடலாமா…. நல்ல வேளை நாய் போய்டுச்சு.

பக்கத்து பார்க்குல என்ன விட வசதியா, வயசா நிறைய பேர், எதையோ எடுக்க போற மாதிரி (தான் ஆடாட்டாலும் சதை ஆடுது) வேக வேகமா போய்ட்டு இருந்தாங்க. சில பேர் குனிஞ்சு தொப்பைக்கு கீழ கால தேடிட்டு இருந்தாங்க. சில பேர், அங்க இருந்த கம்பியெல்லாம் புடிச்சு வளைக்கறா மாதிரி உடற்பயிற்சி பண்ணிட்டு இருந்தாங்க.

“நீயென்ன புதுசா பண்ணற. நா பண்றதுதான் ஒசத்தி” (நானும் அப்டிதான் பார்த்தேன்).

யாரும் வேற யார் கண்ணையும் பாக்காம, ஏனோ கோவமா அவங்க பயிற்சில குறியா இருந்தாங்க.

நானும் ஒரு பன்னெண்டு சுத்து சுத்திட்டு ஒரு நாற்பது நிமிஷத்துல வீட்டுக்கு திரும்பி வந்துட்டேன். “நானும் நாளைக்கு வரட்டுமா”.. “வேணாம்வேணாம், எழுப்பி விடு போரும்” (நானும் பார்குல யாரு “கண்ணையும்” பாக்கல).. ஹிஹி.

4 comments:

  1. நல்ல விஷயம்!

    ReplyDelete
  2. tamilai pilai ellalaml eludineergal!!!!!

    ReplyDelete
  3. ஒரு சின்ன விஷயத்தை எப்படி நகைச்சுவையுடன் சொல்ல முடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

    ReplyDelete