Tuesday, 25 May 2010

சார்! என் கொழந்தைக்கு சீட்டு கெடைக்குமா?

“சார், என் கொழந்தைக்கு 98% கெடச்சிருக்கு. நீங்கதான் பெரிய என்ஜினியரிங் காலேஜ்ல வேல பாக்கிரீங்களே. சீட்டு கெடக்குமா?” எல்லா அப்பாக்கும் இருக்கற கவலை.

“நீங்க ஃபார்வார்ட் இல்ல? உங்க கொழந்த பொண்ணா, பையனா?”

“பொண்ணுதான். ஏன் கேக்கறீங்க?”

“பொண்ணுன்னா 98.2% கட் ஆஃப். இப்பல்லாம் பொண்ணுங்க ரொம்ப மார்க் வாங்கறாங்கல்ல; அதுனால பின் தங்கிய பசங்களுக்குத்தான் முன்னுரிமை. பொண்ணு பொறந்த தேதி என்ன?”

(அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்!) மே 10 சார்! எதுக்கு கேக்கறீங்க?!”

“அடடா! ரொம்ப சின்ன பொண்ணுங்க! அக்டோபருக்கு முன்ன பொறந்திருந்தா அவங்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம்”

“ஆ! அது ஏன் அப்பிடி?”

“என்னங்க விஷயமே தெரியாம இருக்கீங்க? வயசானாத்தான் அறிவு அதிகமா இருக்கும். என்ஜினியரிங்னா சும்மாவா! யாருக்கு ரொம்ப அதிகம் வயசோ அவங்களுக்குத்தான் அறிவு, நிர்வாகத்திறன் எல்லாம் அதிகமா இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா?.

உங்களுக்கு இன்னும் ஒரு பிரச்சனையும் இருக்கு. உங்க வீடு காலேஜ்லேருந்து அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரு நூறு அடி தள்ளி இருக்கு.”

“அதுனால என்ன?”

“ஏங்க உங்க கொழந்த ரொம்ப தூரத்திலேர்ந்து வரணுமில்ல! அதுனால அஞ்சு கிலோமீட்டருக்குள்ள இருந்தாதான் முன்னுரிமை.
ஒங்க பொண்ணு எந்த Blood group?”

“B+… ஏன் கேக்கறீங்க?”

“அடடா! AB +ve, A2+ve, O -ve, அல்லது A1 –ve அப்படி ஏதாச்சும் இருந்தா சீட்டு கெடைக்க சான்ஸ் அதிகம்.. அதெல்லாம் ரொம்ப அரிதான Blood group இல்ல!”

“ஏங்க இதெல்லாமா இப்போ பாக்கறாங்க?”

“உங்க பொண்ணு கண்ணாடி போட்டுருக்கா?”

“ஆமாம்! ஏன்?!”

“சீட்டு கெடைக்கறது ரொம்ப கஷ்டங்க”.

“…”

“பின்ன என்னங்க; நூறு பேருக்கு மேல வகுப்புல இருப்பாங்க. பின்னாலேருந்து வாத்தியார் தெரிய வேணாமா? அதுனால கண்ணாடி போடாதவங்களுக்குத்தான் முன்னுரிமை….. எங்க சார் கெளம்பிட்டீங்க.. இன்னும் முழுசா கேட்டுட்டுப் போங்க!”

3 comments:

  1. நல்ல எழுத்து நடை. மேலும் எழுத என் ஊக்கங்கள்! வருக! அப்படியே நம்ம வலைக்கும் ஒரு வருகை தாருங்கள். நன்றி!

    http://kaniporikanavugal.blogspot.com/

    ReplyDelete
  2. நாட்டு நடப்பை சுவையாக படம் பிடித்து காட்டியதற்கு நன்றி

    ReplyDelete